உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / சிறுமி வழக்கு குற்றவாளிகளுக்கு விரைந்து தண்டனை வழங்க வேண்டும் எம்.எல்.ஏ., வெங்கடேசன் வலியுறுத்தல் 

சிறுமி வழக்கு குற்றவாளிகளுக்கு விரைந்து தண்டனை வழங்க வேண்டும் எம்.எல்.ஏ., வெங்கடேசன் வலியுறுத்தல் 

புதுச்சேரி : சிறுமி கொலை சம்பவ குற்றவாளிகளுக்கு உச்சபட்ச தண்டனையை விரைவாக வழங்கவேண்டும் என வெங்கடேசன் எம்.எல்.ஏ., வலியுறுத்தியுள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:முத்தியால்பேட்டை சோலை நகரில் நடந்த சிறுமி கொலை சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் மாநில மக்களை மட்டும் இன்றி, நாட்டு மக்கள் மத்தியிலும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவத்தில் ஈடுபட்ட 2 பேருக்கும் உச்சபட்ச தண்டனை வழங்கவேண்டும். இதுபோன்ற நிகழ்வு இனி எப்போதும் எங்கும் நடக்க கூடாது. போலீசார் ரோந்து பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு குற்றங்களை தடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்திற்கு அரசு ரூ. 37 லட்சம் நஷ்டஈடாக கொடுத்தாலும், சிறுமியின் இழப்பு குடும்பத்திற்கு ஈடு செய்ய முடியாது. இந்த சம்பவத்தில் மேலும் யாராவது தொடர்பில் இருப்பது கண்டறியப்பட்டால், அவர்களுக்கும் கடுமையான தண்டனை வழங்க வேண்டும்.இனி வரும் காலங்களில் இது போன்ற மோசமான நிகழ்வு எந்த குழந்தைக்கும், பெண்ணுக்கும் நடக்கக் கூடாது. போதை பொருள் விற்பனையை தடுப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் சிறப்புக்குழு அமைத்து மேற்கொள்ள வேண்டும்.அதே நேரத்தில் பெற்றோர்களும் தங்களது குழந்தைகள் மீது தனி கவனம் செலுத்த வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ