உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / நடமாடும் இ – சேவை மைய வாகனம் செயல் விளக்கம்

நடமாடும் இ – சேவை மைய வாகனம் செயல் விளக்கம்

அரியாங்குப்பம்: புதுச்சேரி சட்டப்பணிகள் ஆணையம் சார்பில் நடமாடும் இ சேவை மைய வாகன செயல்விளக்கம் நல்லவாடு கிராமத்தில் நடந்தது. நல்லவாடு சமுதாய நலக் கூடத்தில் நடந்த நிகழ்ச்சியில், நீதிபதிகள் சவுந்தர்யா, ரமேஷ் ஆகியோர் நடமாடும் இ சேவை மைய வாகனம் குறித்தும், அதன் செயல்பாடுகள் பற்றியும் விளக்கம் அளித்தனர். இந்த வாகனம் மூலம் கிடைக்கும் சட்ட உதவிகள், வீடியோ கான்பிரன்ஸ் வசதிகள், வாய்தா தேதி, இ பைலிங் சேவைகள் குறித்து எடுத்துரைத்தனர். நிகழ்ச்சியில், நீதிமன்ற ஊழியர்கள் கார்த்திக், வெங்கடேசன், ராமலிங்கம் மார்ட்டின், சிவா, பரதன், வழக்கறிஞர் மதுரை முத்து, கிராம பஞ்சாயத்தார்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி