உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / அரசு பள்ளியில் மாதிரி பேரவை தேர்தல்

அரசு பள்ளியில் மாதிரி பேரவை தேர்தல்

புதுச்சேரி : ஆண்டியார்பாளையம் அரசு நடுநிலைப் பள்ளியில் மாணவர்களுக்கான மாதிரி பேரவை தேர்தல் நடந்தது.அரியாங்குப்பம் அடுத்த ஆண்டியார்பாளையம் அரசு நடுநிலைப் பள்ளி மாணவர்கள் கல்வி, சுற்றுச்சூழல், சுகாதாரமான குடிநீர், சுகாதாரம், சத்துணவு உள்ளிட்ட பல அடிப்படைத் தேவைகளை பள்ளி நிர்வாகத்திடம்கேட்டு பெரும் சூழ்நிலையை ஏற்படுத்தும் வகையில், மாதிரி பேரவை தேர்தலுக்கான ஓட்டுப் பதிவு நடந்தது.தலைமையாசிரியர் இளஞ்சியம் தேர்தல் துறை அதிகாரியாகவும், துணை தேர்தல் அதிகாரியாக மாணவர்கள் ஆதிச்செல்வம், ராதிகா, குருமூர்த்தி, கிருத்திகா ஆகியோர் செயல்பட்டனர். மாணவர்கள் வரிசையில் நின்று ஓட்டளித்தனர்.ஏற்பாடுகளை ஆசிரியர்கள் மற்றும் அலுவலக ஊழியர்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ