மேலும் செய்திகள்
பெண்ணிடம் அநாகரிகம் பா.ஜ., தலைவர் நீக்கம்
13-May-2025
புதுச்சேரி :ஏம்பலம் அருகே வீட்டு பீரோவை உடைத்து பணம், வெள்ளி நகைகளை திருடிச் சென்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.ஏம்பலம் அடுத்த நத்தமேடு விநாயகர் கோவில் தெருவைச் சேர்ந்தவர் பத்மநாபன், 63; விவசாயி. இவர் நேற்று முன்தினம் இரவு வீட்டில் குடும்பத்துடன் துாங்கினர். அதிகாலை பத்மநாபன் எழுந்து பார்த்தபோது, அவரது வீட்டு பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த ரூ. 64 ஆயிரம் பணம், 2 வெள்ளி குத்துவிளக்கு, 3 காமட்சியம்மன் விளக்கு, பஞ்சபாத்திரம் செட், கவரிங் நகைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர்.இதுகுறித்து பத்மநாபன் கரிக்கலாம்பாக்கம் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
13-May-2025