உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ஆச்சாரியா கல்லுாரியில் புரிந்துணர்வு ஒப்பந்தம்

ஆச்சாரியா கல்லுாரியில் புரிந்துணர்வு ஒப்பந்தம்

புதுச்சேரி : ஆச்சாரியா பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரியில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.வில்லியனூர் ஆச்சாரியா பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரியில் ஆச்சாரியா கல்விக் குழும நிர்வாக இயக்குனர் அரவிந்தன் வழிகாட்டுதலின் படி, கல்லூரி முதல்வர் குருலிங்கம் முன்னிலையில், ஆச்சாரியா பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரி மற்றும் யூ கேன்பிளை டிரோன் டெக்னாலஜி இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. இந்த ஒப்பந்தத்தின் மூலம் கல்லூரியில் பயிலும் மாணவ- மாணவிர்களுக்கு மற்றும் ஆசிரியர்களுக்கு திறன் மேம்படுத்தும் சிறப்பு பயிற்சிகள் மற்றும் வகுப்புகள் அளிக்கப்படும். இந்த ஒப்பந்தத்தின் மூலம் கல்லுாரியில் பயிலும் மாணவ- மாணவியர்களுக்கு தொழிற்பயிற்சி வேலை வாய்ப்பு அளிக்கப்படும்.ஏற்பாடுகளை ஆச்சாரியா பொறியியல் கல்லுாரியின் பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பு குழுத் தலைவர் ஆனந்த் செய்திருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி