உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்.,சிறப்பு கவுன்சிலிங் மாணவர்கள் பட்டியல் வெளியீடு

எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்.,சிறப்பு கவுன்சிலிங் மாணவர்கள் பட்டியல் வெளியீடு

புதுச்சேரி: எம்.பி.பி.எஸ்., பல்மருத்துவம், ஆயுர்வேதம், கால்நடை படிப்புகளுக்கு சிறப்பு கவுன்சிலிங் நடத்தி வரைவு பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.அரசு ஒதுக்கீட்டினை பொருத்தவரையில் மாகி ராஜிவ்காந்தி ஆயுர்வேத கல்லுாரியில் மூன்று மாணவர்களுக்கும், மாகி பல் மருத்துவ கல்லுாரியில் 7 மாணவர்களுக்கும், வெங்கடேஸ்வரா பல் மருத்துவ கல்லுாரியில் மூன்று மாணவர்களுக்கும் சீட் ஒதுக்கப்பட்டுள்ளது.நிர்வாக இடங்களை பொருத்தவரை மாகி ராஜிவ் காந்தி ஆயுர்வேத கல்லுாரியில் -3, மகாத்மா காந்தி பல் மருத்துவ கல்லுாரியில்-8, மாகி பல் மருத்துவ கல்லுாரியில்-25, வெங்கடேஸ்வரா பல் மருத்துவ கல்லுாரியில் -9 பேருக்கு சீட் ஒதுக்கப்பட்டுள்ளது.எம்.பி.பி.எஸ்., நிர்வாக இடங்களை பொருத்தவரை அரசு மருத்துவ கல்லுாரியில் ஒரு மாணவிக்கு சீட் ஒதுக்கப்பட்டுள்ளது. பிம்ஸ்-3, மணக்குள விநாயகர்-19, வெங்கடேஸ்வரா-31 பேருக்கு சீட் ஒதுக்கப்பட்டுள்ளது. கால்நடை படிப்பு நிர்வாக இடங்களை பொருத்தவரை ராஜிவ் காந்தி கால்நடை மருத்துவ கல்லுாரியில் இரண்டு மாணவர்களுக்கு சீட் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.என்.ஆர்.ஐ., சீட்டுகளை பொருத்தவரை அரசு மருத்துவ கல்லுாரியில்-1, பிம்ஸ்-1, மணக்குளவிநாயகர்-12, வெங்கடேஸ்வரா-3 பேருக்கு சீட் ஒதுக்கப்பட்டுள்ளது. சீட் கிடைத்த மாணவர்கள் இன்று 3ம் தேதி முதல் 5ம் தேதி மாலை 5 மணிக்குள் அந்தந்த கல்லுாரியில் அசல் சான்றிதழ்களை சமர்ப்பித்து சேர வேண்டும் என, சென்டாக் அறிவுறுத்தியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை