உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பன்றி வளர்ப்போருக்கு நகராட்சி ஆணையர் எச்சரிக்கை

பன்றி வளர்ப்போருக்கு நகராட்சி ஆணையர் எச்சரிக்கை

புதுச்சேரி : உழவர்கரை நகராட்சி ஆணையர் சுரேஷ்ராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: உழவர்கரை நகராட்சிக் குட்பட்ட பகுதிகளில் உள்ள காலியிடங்களில் பன்றிகள் சுற்றி திரிவதாகவும், அதன் மூலம் சுகாதார சீர்கேடு ஏற்படுவதாக உழவர்கரை நகராட்சிக்கு புகார்கள் வருகிறது. அதையடுத்து நகராட்சி சுகாதாரப் பிரிவு அதிகாரி கள் ஆய்வு செய்ததில் கிருஷ்ணா நகர், ஞானபிரகாசம் நகர், லாஸ்பேட்டை பகுதிகளில் பன்றிகள் சுற்றித் திரிவது உறுதி செய்யபட்டுள்ளது. மேலும் பன்றிகளை வளர்ப்போர் அதனை சரியான இடத்தில் வைத்து பராமரிக்காமல் வெளியிடத்தில் திரிய விடுவதாக தெரிய வருகிறது. பன்றிகள் வளர்ப்போர் தங்களுக்கு சொந்தமான இடத்தில் சுகாதாரமாக பன்றிகளை வளர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. தவறும் பட்சத்தில் உழவர்கரை நகராட்சி பன்றிகளை பிடித்து அப்புறப்படுத்துவதோடு, பன்றிகள் வளர்ப்போர் மீது காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டு சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ