மேலும் செய்திகள்
வேகத்தடை அமைக்க கோரி சாலை மறியல்
11-Feb-2026
புதுச்சேரி: முத்தியால்பேட்டை மக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது. முத்தியால்பேட்டை, மாணிக்க முதலியார் தோட்டம் பகுதியில் 80க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். அவர்கள், தங்களுக்கான பொது வழி குறுகலாக உள்ளது. அவசர காலத்தில் சென்றுவர பொது வழி ஏற்படுத்தி தர கோரி, அப்பகுதி மக்கள் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தொகுதி எம்.எல்.ஏ., பிரகாஷ்குமார், நகராட்சி ஆணையர் பாஸ்கர் உள்ளிட்டோர் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அவர்கள், விரைந்து நடவடிக்கை எடுப்பதாக கூறியதன்பேரில், அப்பகுதி மக்கள் கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் 1:00 மணி நேரம் போக்குவரத்து பாதித்தது.
11-Feb-2026