மாயமான தாய், மகன் கடலுாரில் மீட்பு
அரியாங்குப்பம்,: காணாமல் போன் தாய், மகனை போலீசார் கடலுாரில் மீட்டனர்.மூலக்குளத்தை சேர்ந்தவர் ராஜ்குமார், 39. இவரது மனைவி சவிதா, 38; மனநிலை பாதித்த இவர், சிகிச்சை பெற்று வருகிறார். கணவர், மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, சவிதா கோபித்துக் கொண்டு தவளக்குப்பத்தில் உள்ள தாய் வீட்டில் தங்கியிருந்தார்.இந்நிலையில், கணவர் வீட்டுக்கு செல்வதாக, தனது பெற்றோரிடம் கூறி விட்டு, நேற்று முன்தினம், சவிதா தனது 3 வயது மகனை அழைத்து கொண்டு சென்றார். ஆனால் அவர் கணவர் வீட்டுக்கு செல்லாதது தெரியவந்தது. இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை.இதுகுறித்து, அவரது தாய் கொடுத்த புகாரின் பேரில், தவளக்குப்பம் போலீசார் வழக்குப் பதிந்து, விசாரித்து வந்தனர். அவர், தவளக்குப்பத்தில் பஸ் ஏறி, காரைக்கால் சென்றார். பின், அவர், காரைக்கால் பஸ் நிலையத்தில் இருந்து மயிலாடுதுறை சென்று, அங்கிருந்து, பஸ் ஏறி கடலுாருக்கு வந்து கொண்டிருந்தது தெரியவந்தது.உடனடியாக, தவளக்குப்பம் போலீசார், கடலுார் பஸ் நிலையத்திற்கு சென்று கண்காணித்து வந்தனர். காரைக்கால் பஸ்சில் இருந்து இறங்கிய சவிதா மற்றும் அவரது மனை மீட்டு, அவரது பெற்றோரை வரவழைத்து, ஒப்படைத்தனர்.