செக்யூரிட்டி சாவில் மர்மம்
புதுச்சேரி: மர்மமான முறையில் செக்யூரிட்டி இறந்தது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். புதுச்சேரி வானரப்பேட் பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ் 58, இவர் சேதாரப்பட்டில் வீடு வாடகை எடுத்து தங்கி அங்கே உள்ள தனியார் கம்பெனியில் செக்யூரிட்டி வேலை செய்து வந்தார். குடிப்பழக்கம் உள்ள இவர் நேற்று முன்தினம் காலை அவரது அறையில் இறந்த நிலையில் காணப்பட்டார். தகவலறிந்த சேதாரப்பட்டு போலீசார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். புகாரின் பேரில் சேதாரப்பட்டு போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.