நல்ல பெயர் வாங்காத நாராயணசாமி பா.ஜ., தலைவர் பகீர் குற்றச்சாட்டு
புதுச்சேரி: புதுச்சேரியில் முதல்வராக இருந்த போதுமக்களிடம்,கட்சியினரிடமும்நல்ல பெயர் வாங்காதவர் நாராயணசாமி என பா.ஜ., மாநில தலைவர் செல்வகணபதி குற்றம் சாட்டியுள்ளார்.அவரது அறிக்கை:புதுச்சேரியில் ரூ.5 ஆயிரம் நிவாரணம், 10 நாட்கள் ஆகியும் இன்னும் வரவில்லை என முன்னாள் முதல்வர் நாராயணசாமி கூறியுள்ளார். சாலையோர சிறு வியாபாரிகளுக்கு பிரதமரின் ஸ்வநிதித்திட்டத்தில், 9 யூனியன் பிரதேசங்களில் புதுச்சேரி, 3 வது இடத்தில் உள்ளது. ஜீவன்ஜோதி பீமாத் திட்டத்தில் இங்குபயனாளிகள், 1.5 லட்சத்தை கடந்து விட்டனர்.சுரக்ஷா பீமா யோஜனா திட்டத்தில் கடந்த ஆண்டே, 26 ஆயிரத்து 148 பேர் பதிவு செய்துள்ளனர்.செல்வ மகள் திட்டத்தில் பயனாளிகள் 1 லட்சத்தை தொடவுள்ளது. வேளாண் கடன் அட்டை திட்டத்திலும், புதுச்சேரியில் பயனாளிகள் அதிகரிக்கப்பட்டு,20 ஆயிரம் பேர் உள்ளனர்.இதையெல்லாம் அவர் முதல்வராக இருந்த காலத்திலும் மத்திய அரசு கொடுத்தது. ராகுலிடம் நல்ல பெயர் வாங்க அப்போதைய கவர்னர் கிரண் பேடி, மத்திய அரசிடம் தினந்தோறும் மோதல் போக்கை கடைபிடித்தார். மக்களிடமும் ,அவரதுகட்சிக்காரர்களிடமும் நல்ல பெயர் வாங்கவில்லை.நிவாரண நிதி வங்கிக்கணக்குகளில் வரவு வைக்கப்படுகிறது. மத்திய அரசு நிவாரணம் வழங்க உள்ளது.பெஸ்ட் புதுச்சேரி என்ற வாக்குறுதியை அளித்து பா.ஜ., கூட்டணி ஆட்சிக்கு வந்தது. அதை நிறைவேற்றி வருகிறோம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.