உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / தேசிய சீனியர் வாலிபால் சாம்பியன்ஷிப்போட்டி

தேசிய சீனியர் வாலிபால் சாம்பியன்ஷிப்போட்டி

புதுச்சேரி அணி வீரர்கள் தேர்வுபுதுச்சேரி: தேசிய சீனியர் வாலிபால் சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்கும் புதுச்சேரி அணி வீரர்கள் தேர்வு செய்வதற்கான போட்டி நேற்று துவங்கியது.இந்திய வாலிபால் கூட்டமைப்பு, இந்திய ஒலிம்பிக் சங்கம், இந்திய விளையாட்டு இளைஞர் நல அமைச்சகம் சார்பில், ராஜஸ்தான், ஜெய்பூரில் 69வது சீனியர் தேசிய வாலிபால் சாம்பியன்ஷிப் போட்டி நடக்கவுள்ளது. இதில் பங்கேற்று விளையாடும் புதுச்சேரி அணியை தேர்வு செய்வதற்கான முகாம், லாஸ்பேட்டை பல்நோக்கு உள்விளையாட்டு அரங்கில் நேற்று துவங்கியது.இதில் புதுச்சேரி காரைக்கால், மாகி, ஏனாம் பகுதியைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டனர். விளையாட்டு வீரர்கள் தேர்வு செய்வதிற்கான முகாமை கல்யாணசுந்தரம் எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார்.வாலிபால் சங்க நிர்வாகிகள், பயிற்சியாளர்கள் விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டனர். விளையாட்டு வீரர்கள் தேர்வு போட்டி, இன்று 24ம் தேதியும் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை