கடற்படை அதிகாரி முதல்வருடன் சந்திப்பு
புதுச்சேரி: புதுச்சேரி கடற்படை அதிகாரி ரியல் அட்மிரல் சதீஷ் ெஷனாய், நேற்று சட்டசபையில் முதல்வர் ரங்கசாமியை மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினார்.இந்திய கடற்படையில் சேர்வது குறித்து புதுச்சேரி இளைஞர்களிடையே ஆர்வத்தை ஏற்படுத்திடும் பொருட்டு, பள்ளி, கல்லுாரிகளில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்த அனுமதி கோரினார்.மேலும், புதுச்சேரி அரசு சார்பில் கடற்கரை சாலையில் நடைபெறும் கண்காட்சிகளில் கடற்படைக்கு என தனியாக அரங்கு ஒதுக்கி தந்தால், கடற்படையின் சிறப்புகள் குறித்து மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு செயல் விளக்கம் அளிக்க ஏதுவாக இருக்கும். இதன் மூலம் கடற்படையில் புதுச்சேரி இளைஞர்கள் அதிகளவில் பணியில் சேர்வதற்கு நல்வாய்ப்பாக இருக்கும் என்றார்.அதனை கேட்ட முதல்வர், உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.