உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / நவோதயா வித்யாலயா: 6ம் வகுப்பு சேர்க்கைக்கு நுழைவு தேர்வு புதுச்சேரியில் 1,735 மாணவர்கள் பங்கேற்பு

நவோதயா வித்யாலயா: 6ம் வகுப்பு சேர்க்கைக்கு நுழைவு தேர்வு புதுச்சேரியில் 1,735 மாணவர்கள் பங்கேற்பு

புதுச்சேரி: நவோதயா வித்யாலயா பள்ளியில் ஆறாம் வகுப்பில் சேருவதற்கான நுழைவு தேர்வினை புதுச்சேரியில் 1,735 மாணவர்கள் எழுதினர்.நவோதயா வித்யாலயா பள்ளிகளில் ஆறாம் வகுப்பில் சேருவதற்கான முதற்கட்ட தேர்வு கடந்தாண்டு நவம்பர் 4ம் தேதி நடந்தது. இரண்டாம் கட்ட ஆறாம் வகுப்பு நுழைவு தேர்வு நேற்று காலை 11:30 மணி முதல் மதியம் 1.30 மணி வரை நடந்தது. அறிவு திறன்-50 மதிப்பெண், எண்கணித அறிவு தேர்வு-25, மொழியறிவு-25 என மொத்தம் 100 மதிப்பெண்ணிற்கான இத்தேர்வு 2 மணி நேரம் நடந்தது.புதுச்சேரியில் திருவள்ளுவர் அரசு பெண்கள் மேனிலைப்பள்ளி, திரு.வி.க.,பள்ளி, அன்னை சிவகாமி, அரியாங்குப்பம் தந்தை பெரியார், கிருமாம்பாக்கம் அம்பேத்கர், வில்லியனுார் விவேகானந்தா, நெட்டப்பாக்கம் கம்பன், கலிதீர்த்தாள்குப்பம் கலைஞர் கருணாநிதி உள்ளிட்ட எட்டு அரசு பள்ளிகளில் இத்தேர்வு நடந்தது.புதுச்சேரியில் பெரியக்காலாப்பட்டில் நவோதயா பள்ளி அமைந்துள்ளது. இப்பள்ளியில் ஆறாம் வகுப்பில் மொத்தம் 80 சீட்டுகள் உள்ளன. இந்த சீட்டுகளுக்கு விண்ணப்பித்த 2,083 மாணவர்களில் 1,735 பேர் தேர்வு எழுதினர். 83 சதவீதம் பேர் பங்கேற்றனர். சிறந்த கல்வி கிடைக்க வேண்டும் என்பதற்காக தங்கி படிக்கும் உறைவிட பள்ளியான நவோதயா பள்ளிகளில் தங்களுடைய பிள்ளைகளை சேர்க்க பெற்றோர் ஆர்வம் காட்டுவதை இது வெளிப்படுத்தியது.தேர்வு மையங்களை முதன்மை கல்வி அதிகாரி தனசெல்வம் நேரு, நவோதயா பள்ளி முதல்வர் கண்ணதாசன் ஆகியோர் ஆய்வு செய்தனர்.தேர்வு முடிந்ததும், பலத்த போலீஸ் பாதுகாப்புடன் விடைத்தாள்கள் கல்வி வளாக மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ