நவராத்திரி பெருவிழா
புதுச்சேரி: பாகூர் அடுத்த குடியிருப்புபாளையம் அங்காளபரமேஸ்வரி கோவிலில் நவராத்திரி விழா மற்றும் அம்பு உற்சவ திருவிழா வரும் 3ம் தேதி துவங்குகிறது.வரும் 3ம் தேதி முதல் 12ம் தேதி வரை நடக்கும் விழாவில், தினமும் காலை அம்மனுக்கு சிறப்பு அபி ேஷகம் ஆராதனைகளும், இரவு 7 மணிக்கு அங்காள பரமேஸ்வரி பல்வேறு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாளிக்கிறார். முக்கிய நிகழ்ச்சியான, நவராத்திரி பூஜை வரும் 11ம் தேதியும், 12ம் தேதி காலை விஜயதசமி உற்சவ திருவிழா நடக்கிறது. அன்று இரவு 7.00 மணிக்கு அங்காளபரமேஸ்வரி வீதியுலா நடக்கிறது. தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்படுகிறது.