உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / புதிய சட்டசபை காங்., எம்.எல்.ஏ., கோரிக்கை

புதிய சட்டசபை காங்., எம்.எல்.ஏ., கோரிக்கை

  புதிய சட்டசபையை விரைவில் கட்ட வேண்டும் என காங்., எம்.எல்.ஏ., கார்த்திகேயன்  கோரிக்கை விடுத்தார்.  சட்டசபையில் அவர் பேசியதாவது புதிய சட்டசபை கட்ட விரைவில் ஏற்பாடு செய்ய வேண்டும். எம்.எல்.ஏ.,க்களுக்கு உதவியாளர்களை நியமிக்க வேண்டும். தற்காலிக சபாநாயகரை, நிரந்தர சபாநாயகராக இருக்க வேண்டும். அனுபவமுள்ள எம்.எல்.ஏ.,வை சபாநாயகராக தேர்வு செய்ய வேண்டும்.  சபாநாயகர் விஷயத்தை கவர்னர் ஏன் தள்ளி போடுகிறார் என தெரியவில்லை. இதுவரை வரலாற்றில் இப்படி நடந்தது இல்லை.  புதிய எம்.எல்.ஏ.,க்களின் பேச்சு கன்னிபேச்சு அல்ல, கன்னிவெடி பேச்சு. அவர்களுக்கு சபாநாயகர் முழுசுதந்திரம் தர வேண்டும். கவர்னர் ஒரு ஐ.ஏ.எஸ்., அதிகாரியாக இருந்தவர். அவர் மூலம் பல திட்டங்களை செய்யலாம். ஆனால் அவர் வேறுபாதையில் செல்கிறார். . ஏரிகளை துார்வார வேண்டும். வானுார் முதல் பாகூர் வழியாக பெரிய நீர்ஊற்று உள்ளது. எனவே ஏரிகளை துார் வாரி தண்ணீர் தேக்கலாம். உடைந்த சங்கராபரணி ஆற்றின் படுக்கையணையை விரைவில் கட்ட வேண்டும்.   நிதிவருவாய் உயர்ந்துள்ளது. தொழிற்சாலைகளில் வரி வசூல் செய்கிறோம்.  அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டும். கரசூரில் கையப்படுத்திய இடம் காடாகா மாறியுள்ளது. இங்கு சாலை, குடிநீர், மின்சார வசதி செய்தால் தொழிற்சாலைகள் வரும். மது மூலம் மட்டுமல்லாமல், தொழிற்சாலைகள் மூலமாகவும் வருமானம் வரும்.  இவ்வாறு அவர் பேசினார். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை