மேலும் செய்திகள்
காமராஜர் நினைவு நாள்
03-Oct-2025
புதுச்சேரி: வருவாய் துறையில் பணி நியமனம் செய்யப்பட்ட 30 துணை தாசில்தார்கள் சட்டசபையில் முதல்வரை சந்தித்து வாழ்த்து பெற்றனர். வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையில் காலியாக இருந்த துணை தாசில்தார் பணியிடங்களுக்கு போட்டித் தேர்வு நடத்தப்பட்டது. இத்தேர்வில், தேர்ச்சி பெற்ற 30 பேருக்கு நேற்று முன்தினம் காமராஜர் மணி மண்டபத்தில் நடந்த அரசு விழாவில், கவர்னர் கைலாஷ்நாதன் பணி ஆணை வழங்கினார். பணி ஆணை பெற்ற துணை தாசில்தார்கள் நேற்று சட்டசபையில், முதல்வர் ரங்கசாமியை சந்தித்து வாழ்த்து பெற்றனர். அப்போது, முதல்வர் சிறப்பாக பணியாற்றி மக்களுக்கு சேவையாற்ற வாழ்த்தினார். சபாநாயகர் செல்வம், அமைச்சர்கள் லட்சுமிநாராயணன், தேனீ ஜெயக்குமார், கலெக்டர் குலோத்துங்கன், துணை கலெக்டர் சிவசங்கரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
03-Oct-2025