உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / காயமடைந்தவருக்கு உதவ யாருமில்லை சிகிச்சையை தொடர முடியாமல் தவிப்பு

காயமடைந்தவருக்கு உதவ யாருமில்லை சிகிச்சையை தொடர முடியாமல் தவிப்பு

புதுச்சேரி : விபத்தில் படுகாமடைந்தவர் உதவிக்கு யாரும் இல்லாததால், சிகிச்சையை தொடர முடியாமல் தவித்து வருகிறார்.திருச்சி, திருவெறும்பூரை சேர்ந்தவர் இளஞ்செழியன், 53; மெக்கானிக் இன்ஜினியர். குடும்ப பிரச்னையில் மனைவியை பிரிந்து கடந்த 6 மாதங்களுக்கு முன்பு வீட்டைவிட்டு வெளியேறினார்.கடந்த ஒரு மாதத்திற்கு முன், புதுச்சேரிக்கு வந்த இளஞ்செழியன், கோரிமேடு ஜிப்மர் 7ம் நம்பர் கேட்சாலையோர நடைப்பாதையில் தங்கிருந்தார்.நேற்று முன்தினம் காலையில் கோரிமேட்டில் இருந்து புதுச்சேரி நோக்கி சென்ற பி.ஆர்.டி.சி., பஸ் இளஞ்செழின் மீது மோதி, அங்கிருந்து நிழற்குடை மின் கம்பத்தில் மோதி நின்றது. இதில், இளஞ்செழியனுக்கு கால், மார்பு, தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.அங்கிருந்த அரசு பள்ளி ஆசிரியர்கள் விஜய், பார்த்திபன் ஆகியோர் இளஞ்செழியனை காப்பாற்றி ஜிப்மரில் சேர்த்தனர். அவர், அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது.பலத்த காயம் ஏற்பட்டதால், கால், மார்பு பகுதியில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும். நோயாளியுடன் உதவிக்கு யாராவது இருந்தால் மட்டுமே ஆப்ரேஷன் செய்ய முடியும்; இல்லை என்றால் டிஸ்சார்ஜ் செய்து அனுப்பி விடுவோம் என, டாக்டர்கள் கூறுவதாக இளஞ்செழியன் தெரிவித்துள்ளார். தனக்கு சிகிச்சை அளிக்கும்படி, இளஞ்செழியன் டாக்டர்களிடம் உதவி கேட்டு வருகிறார். உதவிக்கு யாரும் இல்லாததால், சிகிச்சை தொடர முடியாமல் அவர், தவித்து வருகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ