உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / புகையிலை ஒழிப்பு தின விழிப்புணர்வு ஊர்வலம்

புகையிலை ஒழிப்பு தின விழிப்புணர்வு ஊர்வலம்

புதுச்சேரி: சுகாதாரத்துறை, தேசிய சுகாதார இயக்கம், புகையிலை கட்டுப்பாட்டு திட்டம், மார்பு நோய் மருத்துவமனை, இந்திரா காந்தி மருத்துவக் கல்லுாரி, மகாத்மா காந்தி பல் மருத்துவமனை சார்பில், புகையிலை ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.ஆயுஷ் இயக்குநரகத்தின் இயக்குனர் ஸ்ரீதரன் ஊர்வலத்தை துவக்கி வைத்தார். புகையிலை கட்டுப்பாட்டு அதிகாரி வெங்கடேஷ், தேசிய வாய் சுகாதார திட்டத்தின் மாநில அதிகாரி கவிபிரியா, ஆலோசகர் சூரியகுமார், மணிமாறன் உள்ளிட்ட அதிகாரிகள், சுகாதார ஊழியர்கள், மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர். ஊர்வலத்தில் மருத்துவக்கல்லுாரி மாணவர்கள் புகையினால் ஏற்படும் விளைவுகள் பற்றிய விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி சென்றனர்.கடற்கரை காந்தி சிலையில் இருந்து ஊர்வலம் புறப்பட்டு, முக்கிய வீதிகளில் வழியாக சென்று, மீண்டும் காந்தி சிலை அருகே நிறைவு பெற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை