உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / குழந்தை கடத்தல் கும்பல் என நினைத்து வடமாநில தொழிலாளர்களுக்கு அடி உதை

குழந்தை கடத்தல் கும்பல் என நினைத்து வடமாநில தொழிலாளர்களுக்கு அடி உதை

புதுச்சேரி : குழந்தை கடத்தல் கும்பல் என நினைத்து வடமாநில தொழிலாளர்கள் 5 பேரை கிராம மக்கள்அடித்து உதைத்து போலீசில் ஒப்படைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.புதுச்சேரி சோலை நகரில் வீட்டின் முன்பு விளையாடிய 9 வயது சிறுமி நேற்று முன்தினம்மாயமானர். அவரை தேடும் பணி நடந்து வருகிறது. இது பெற்றோர் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.இந்த நிலையில் காரைக்கால் கிளிஞ்சல்மேடு மீனவ கிராமத்தில் நேற்று முன்தினம் வடமாநிலத்தைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் சிறுமி ஒருவருக்கு சாக்லெட் கொடுத்துள்ளார். அச்சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்ததால், சந்தேகமடைந்த கிராம மக்கள் வடமாநில வாலிபரையும் அவருடன் வந்த மற்ற 4 வாலிபர்களை சேர்த்து அடித்து உதைத்தனர்.இந்த தகவல் காரைக்கால் டவுன் போலீசாருக்கு சென்றது. சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் 5 வாலிபர்களை மீட்டு போலீஸ் நிலையம் அழைத்து விசாரித்தனர். விசாரணையில், மேற்கு வங்கமாநிலத்தைச்சேர்ந்த 5 வாலிபர்கள், கிளிஞ்சல்மேடு கிராமத்தில் தங்கி மீன்பிடி மற்றும் ஓட்டல் வேலைகளில் செய்து வந்துள்ளனர். பணி முடித்து வீட்டிற்கு சென்ற வாலிபர்கள்,வழியில் விளையாடிய குழந்தைக்கு சாக்லெட் கொடுத்துள்ளது தெரியவந்தது.இனி குழந்தைகளுக்கு சாக்லெட் ஏதும் வாங்கி தர கூடாது என எச்சரித்து வடமாநில தொழிலாளர்களை போலீசார் அனுப்பி வைத்தனர். மேற்கு வங்க மாநில தொழிலாளர்களை அடித்து உடைத்து போலீசில் ஒப்படைக்கும் வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. இச்சம்பவம் காரைக்காலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ