உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  வாரிசுதாரர்களுக்கு வேலை வழங்காமல் இருப்பது சட்டத்திற்கு புறம்பான செயல் அ.தி.மு.க., அன்பழகன் பேச்சு 

 வாரிசுதாரர்களுக்கு வேலை வழங்காமல் இருப்பது சட்டத்திற்கு புறம்பான செயல் அ.தி.மு.க., அன்பழகன் பேச்சு 

புதுச்சேரி: புதுச்சேரி நகராட்சியில் பணிபுரிந்து மரணம் அடைந்த ஊழியர்களின் வாரிசுதாரர்கள் தங்களுக்கு வேலை வழங்கிட கோரி, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களின், போராட்டத்திற்கு, ஆதரவு தெரிவித்து அ.திமு.க., மாநில செயலாளர் அன்பழகன் பேசியதாவது; கீழ்நிலை பணியில் உள்ளவர்கள் மரணம் அடைந்தால், அவர்களின் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் அரசு வேலை வழங்க வேண்டும். புதுச்சேரி நகராட்சியில் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக, வாரிசுதாரர்களுக்கு வேலை வழங்காமல் இருப்பது மனிதாபிமானமற்ற செயலாகும்.உழவர்கரை நகராட்சியில் பணியின் போது மரணம் அடைந்த ஊழியர்களின், வாரிசுதாரர்களுக்கு ஆண்டுதோறும் உள்ளாட்சித்துறை பணி வழங்கி வருகிறது. ஆனால், புதுச்சேரி நகராட்சி வாரிசுதாரர்களுக்கு வேலை வழங்காமல் இருப் பது சட்டத்திற்கு புறம் பான செயலாகும். வாரிசுதாரர்களின் நியாயமான கோரிக்கையை அரசு ஏற்று உடனடியாக பணி வழங்கிட வேண்டும். போராட்ட களத்தை மாற்றம் செய்து சட்டசபை எதிரில் அரசின் கவனத்தை ஈர்க்கும் விதத்தில் போராட்டத்தை மாற்றிட வேண்டும். வாரிசுதாரர்களின் நியாயமான இந்தப் போராட்டத்திற்கு அ.தி.மு.க., துணை நிற்கும்' என்றார். தொடர்ந்து, அவர், சங்க நிர்வாகிகளை முதல்வரிடம் அழைத்து சென்று உள்ளாட்சி நிர்வாகத்தில் பணி வழங்கிட வலியுறுத்தினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை