உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / காச நோயாளிகளுக்கு சத்துணவு தொகுப்பு

காச நோயாளிகளுக்கு சத்துணவு தொகுப்பு

நெட்டப்பாக்கம்: நெட்டப்பாக்கம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் காச நோயாளிகளுக்கு சத்துணவு தொகுப்பு வழங்கப்பட்டது.மாநில காச நோய் அதிகாரி வெங்கடேசஷ் தலைமை தாங்கினார். டாக்டர்கள் முகந்தி, அய்யம்மாள், சிவசங்கரி, பல் மருத்துவர் ஹெலன் முன்னிலை வகித்தனர். முன்னாள் பா.ஜ., ஓ.பி.சி., அணி மாவட்ட தலைவர் வெங்கடேசன், தமிழ்மணி ஆகியோர் காச நோயாளிகளுக்கு சத்துணவு தொகுப்புகளை வழங்கினார். காச நோய் மாநில ஆலோசகர் வெங்கடகிருஷ்ணா, இப்ராகிம் வாழ்த்துரை வழங்கினர். கிராமப்புற செவிலியர் நந்தினி, செல்வமணி கருத்துரை வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்