உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  ஆபாச பேச்சு: வாலிபர் கைது

 ஆபாச பேச்சு: வாலிபர் கைது

நெட்டப்பாக்கம்: பொது இடத்தில் ஆபாசமாக பேசிய வாலிபரை போலீசார் கைது செய்தனர். நெட்டப்பாக்கம் போலீசார் நேற்று முன்தினம் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது விழுப்புரம் மாவட்டம் அற்பிசம்பாளையம் பகுதியைச் சேர்ந்த ரஞ்சித்குமார், 36; என்பவர் மதுபோதையில் தவளக்குப்பம் மெயின் ரோடு அரசு மதுபான கடை எதிரில் நின்று கொண்டு அவ்வழியாக செல்லும் பொதுமக்களை பார்த்து ஆபாசமாக பேசிக் கொண்டிருந்தார். அங்கு ரோந்து பணியில் இருந்த போலீசார் அந்த வாலிபர் மீது வழக்குப் பதிந்து கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ