உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மாடு மீது பைக் மோதி முதியவர் பலி

மாடு மீது பைக் மோதி முதியவர் பலி

காரைக்கால் : காரைக்காலில் மாடு மீது பைக் மோதிய விபத்தில் முதியவர் இறந்தார். காரைக்கால், நாகூர் மியாதெரு பகுதியை சேர்ந்தவர் அக்பர் அலி, 63. இவர் நேற்று முன்தினம் இரவு காரைக்காலில் இருந்து பைக்கில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். நாகூர் மெயின் ரோட்டில் திருபட்டினம் கீழவாஞ்சூர் அருகில் சாலையை கடந்த மாடு ஒன்றின் மீது பைக் மோதியது. படுகாயமடைந்த அவர், காரைக்கால் அரசு மருந்துவனைக்கு கொண்டு சென்றபோது, அவர், இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.விபத்து குறித்து போக்குவரத்து போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை