உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  சிக்னல்களில் கூடுதல் போலீசார் ஓம்சக்தி சேகர் வலியுறுத்தல்

 சிக்னல்களில் கூடுதல் போலீசார் ஓம்சக்தி சேகர் வலியுறுத்தல்

புதுச்சேரி: போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த, கூடுதல் போலீசாரை ஈடுபடுத்த வேண்டும் என, அ.தி.மு.க., உரிமை மீட்பு குழு செயலாளர் ஓம்சக்தி சேகர் வலியுறுத்தி உள்ளார். அவரது அறிக்கை: புதுச்சேரியில் நடந்த போலீஸ் மாநாட்டில் காவல்துறை சிறப்பாக செயல்படுவதாகவும், சிறப்பான முறையில் செயல்பட்டால் தான் அரசுக்கு நல்ல பெயர் கிடைக்கும் என, முதல்வரும், உள்துறை அமைச்சரும் போலீசாருக்கு அறிவுரை வழங்கியுள்ளனர். இதில், மாற்று கருத்து இல்லை. ஆனால், புதுச்சேரி மக்கள், தினமும் போக்குவரத்து நெரிசலால் கடும் அவதிப்பட்டு வ ருகின்றனர். முக்கிய சிக்னல்களில் வாகன ஓட்டிகள் அதிக நேரம் நிற்க வேண்டியுள்ளது. கொக்கு பார்க் சிக்னலில் ஒரு போலீசார் மட்டுமே பணியில் உள்ளார். வி.ஐ.பி.,க்கள் வரும் நேரத்தில் மட்டும் சிக்னல்களில் கூடுதல் போலீசார் நின்று போக்குவரத்தை ஒழுங்கு ப்படுத்துகின்றனர். முக்கிய சிக்னல்களில் குறைந்தது 5 போலீசாரை நிறுத்தி, போக்குவரத்தை ஒழுங்குப்படுத்த வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை