உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ஆன்லைன் மூலம் ரூ. 6.63 லட்சம் மோசடி

ஆன்லைன் மூலம் ரூ. 6.63 லட்சம் மோசடி

புதுச்சேரி: புதுச்சேரியில் பல்வேறு வகையில் ரூ. 6.63 லட்சம் பணம் மோசடி செய்ய சைபர் கிரைம் குற்றவாளிகள் தங்கள் கைவரிசைகளை காட்டியுள்ளனர்.புதுச்சேரியை சேர்ந்தவர் வெங்கடேசன். இவர் மொபைலுக்கு மர்ம நபர் ஒருவர் தொடர்பு கொண்டு, ஆன்லைனில் பணம் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என கூறினார். அதை நம்பி அவர், தவணை முறையில், ரூ. 5.44 லட்சம் பணத்தை தனது வங்கி கணக்கு மூலம் அனுப்பினார். அதன் பிறகு அந்த நபரை தொடர்பு கொள்ள முடியாமல் போனது.அதே போல் புதுச்சேரி வெங்கட கிருஷ்ணனிடம், வங்கி அதிகாரி போல பேசிய நபர், கிரிட்கார்டு சலுகை என கூறி அவரது வங்கி விபரங்களை வாங்கி, ஓ.டி.பி., எண் மூலம் ரூ. 50 ஆயிரம் பணத்தை எடுத்துள்ளனர். மேலும்,4 பேரிடம், மர்ம நபர்கள் தொடர்பு கொண்டு நுாதன முறையில், மொத்தம் ரூ. 69 ஆயிரம் பணத்தை மோசடி செய்தனர். இவர்கள் கொடுத்த புகாரின் பேரில், சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிந்து, குற்றவாளிகளை தேடிவருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை