உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / சக்திமா தொழிற்சாலை விற்பனை நிலையம் திறப்பு

சக்திமா தொழிற்சாலை விற்பனை நிலையம் திறப்பு

புதுச்சேரி: விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் - செஞ்சி மெயின் ரோட்டில் சக்திமா எண்டர்பிரைசஸ் தொழிற்சாலை நேரடி விற்பனை நிலையம் திறப்பு விழா நடந்தது.சக்திமா நிறுவனத்தின் கட்டுமான பொருட்கள் உற்பத்தி செய்யும் புகழ்பெற்ற தொழிற்சாலையாக உள்ளது.பொறியாளர்கள், பெயின்டிங் காண்ட்ராக்டர்களின் வேண்டுகோளை ஏற்று, 'சக்திமா நிறுவனம்' தொழிற்சாலையின் நேரடி விற்பனை நிலையம் திண்டிவனம் - செஞ்சி மெயின் ரோட்டில் துவக்க விழா நடந்தது. இந்த நேரடி விற்பனை நிலையத்தை, திண்டிவனம் சிட்கோ தொழிற்பேட்டை தலைவர் குமார், செயலாளர் தீனதயாலு, குவாலிட்டி பில்டர் பொறியாளர் முருகன் மற்றும் பொறியாளர்கள், பெயிண்டிங் காண்ட்ராக்டர்கள் முன்னிலையில் சக்திமா நிறுவனத்தின் நிறுவனர் நெடுமாறன் குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார். தொடர்ந்து, சக்திமா நிறுவன தயாரிப்பான சுவர் புட்டி, டைல்ஸ் பசைகள், பேஸ் கோட், லைம் வாஷ் பொருட்களின் முதல் விற்பனையை துவக்கப்பட்டது. இதில், காண்ட்ராக்டர் ஏழுமலை, பில்டர்ஸ் சுதாகர், வி.கே.எம்., பில்டர், குழந்தைவேலு, ஸ்ரீதர், பாஸ்கர், ரவி, முத்துக்குமரன், முத்து உட்பட பெயிண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்