உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / சொர்க்கவாசல் திறப்பு

சொர்க்கவாசல் திறப்பு

திருக்கனுார் : திருக்கனுார் அடுத்த செட்டிப்பட்டு கிராமத்தில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத வரதராஜ பெருமாள் கோவிலில், சொர்க்க வாசல் திறப்பு விழா நடந்தது.இதையொட்டி, நேற்று முன்தினம் இரவு சிறப்பு திருமஞ்சனம், மகா அபிஷேகம் நடந்தது. சுவாமிக்கு வைகுந்த வாச அலங்காரம் செய்யப்பட்டு, திரை மூடப்பட்டது.நேற்று அதிகாலை பஜனை குழுவினர் ஊர்வலத்தை தொடர்ந்து சொர்க்க வாசல் திறக்கப் பட்டது. மூலவர் சுவாமி திரை நீக்கப்பட்டு, மங்கள வாத்தியங்கள் முழங்க வைகுந்த காட்சிகள் நடந்தது. மாலை சேஷ வாகனத்தில், ஸ்ரீதேவி பூதேவி சமேத வரதராஜப்பெருமாள் சுவாமி வீதியுலா நடந்தது. இதேபோல், வாதானுார் பாமா ருக்மணி சமேத வேணுகோபால சுவாமி கோவிலில் சொர்க்க வாசல் திறப்பு விழா நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை