உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  மணவெளி கோவில் திருப்பணிக்கு எதிர்க்கட்சித் தலைவர் நிதியுதவி

 மணவெளி கோவில் திருப்பணிக்கு எதிர்க்கட்சித் தலைவர் நிதியுதவி

புதுச்சேரி: மணவெளி செல்வ முத்துமாரியம்மன் கோவில் திருப்பணிக்கு எதிர்க்கட்சித் தலைவர் சிவா ரூ. 3 லட்சம் நிதியை கோவில் நிர்வாகிகளிடம் வழங்கினார். வில்லியனுார் தொகுதி, மணவெளி பூரணி, பொற்கலை உடனுறை ஐயனாரப்பன், சப்தகன்னிகள், கெங்கையம்மன் கோவிலில் உள்ள செல்வ முத்துமாரியம்மன் அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் வரும் 1ம் தேதி நடக்கிறது. இதற்கான திருப்பணிகள் வேகமாக நடந்து வருகிறது. இந்நிலையில் கோவில் கும்பாபிஷேக திருப்பணிக்காக எதிர்க்கட்சித் தலைவர் சிவா தனது சொந்த நிதியில் ரூ. 3 லட்சத்தை கோவில் திருப்பணிக் குழு நிர்வாகிகளிடம் நேற்று வழங்கினார். இதில், சிறப்பு அதிகாரி வீரபுத்திரன், தலைவர் ஜெயச்சந்திரன், மகாலிங்கம், மாணிக்கம், தட்ணாமூர்ததி, ஸ்டாலின், நந்தகோபால், தர்மராஜ், சபாபதி, கிருஷ்ணமூர்த்தி, லட்சுமணன், கலியபெருமாள், வேல்முருகன், சுப்ரமணி, வாசுதேவன், தி.மு.க., தொகுதி செயலாளர் மணிகண்டன், பொதுக்குழு உறுப்பினர் ராமசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ