உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / சென்டாக் கவுன்சிலிங் முடியும் வரை கல்லுாரி வகுப்புகளுக்கு தடை எதிர்க்கட்சி தலைவர் சிவா வலியுறுத்தல்

சென்டாக் கவுன்சிலிங் முடியும் வரை கல்லுாரி வகுப்புகளுக்கு தடை எதிர்க்கட்சி தலைவர் சிவா வலியுறுத்தல்

புதுச்சேரி :சென்டாக் இறுதி கவுன்சிலிங் முடியும் வரை கல்லுாரிகளில் வகுப்புகளை துவங்க அரசு தடை விதிக்க வேண்டும் என, எதிர்க்கட்சி தலைவர் சிவா வலியுறுத்தியுள்ளார்.அவரது அறிக்கை;புதுச்சேரி மாநிலம் கல்விக்கேந்திரமாக மாறி வருவதாக கவர்னரும், முதல்வரும் கூறி வருகின்றனர். ஆனால் மாணவர் சேர்க்கை கூட ஆண்டுதோறும் தாமதமாகவும், குளறுபடிகளுடனும் நடக்கிறது. சென்டாக் மூலம் அரசு இட ஒதுக்கீட்டில் தேர்வாகும் மாணவர்கள் கல்லுாரிகளுக்கு செல்வதற்குள் பாதி பாடங்கள் நடத்தி முடிக்கப்படுகிறது.இது திட்டமிட்டு தனியார் கல்லுாரிகளில் மாணவர் சேர்க்கையை முதலில் முடிக்க வேண்டும் என்பதற்காகவே செய்யப்படுகிறது. இந்த சதித்திட்டம் கலைக்கல்லுாரி, பொறியியல் கல்லுாரி, மருத்துவ கல்லுாரி, செவிலியர் கல்லுாரி என வேறுபாடின்றி அனைத்திலும் செய்யப்படுகிறது.சென்டாக் மூலம் சேர்ந்த மாணவர்கள் கல்லுாரியில் சேர்ந்தால், முன்பு நடத்திய பாடத்தை கற்றுத் தருவதும் இல்லை. இதனால் அவர்கள் பல்கலைக்கழக தேர்வில் பிரகாசிக்க முடியவில்லை. இது வாழ்க்கை முழுக்க அவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது.எனவே, அரசு சென்டாக் இறுதிக்கட்ட கவுன்சிலிங் முடியும் வரை முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வகுப்புகளை துவக்கக்கூடாது என, அனைத்து தனியார் கல்லுாரிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்ப வேண்டும். இதனை மீறும் கல்லுாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அதில், கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை