உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / வெங்கடேஸ்வரா மருத்துவ கல்லுாரியில் எலும்பு சிகிச்சை கருத்தரங்கம்

வெங்கடேஸ்வரா மருத்துவ கல்லுாரியில் எலும்பு சிகிச்சை கருத்தரங்கம்

வில்லியனுார் : அரியூர் வெங்கடேஸ்வரா மருத்துவ கல்லுாரியில் எலும்பு அறுவை சிகிச்சை குறித்த கருத்தரங்கம் நடந்தது.அரியூர் வெங்கடேஸ்வரா மருத்துவ கல்லுாரியில் நடந்த எலும்பு அறுவை சிகிச்சை கருத்தரங்கிற்கு கல்லுாரி இயக்குனர் டாக்டர் ரத்தினசாமி தலைமை தாங்கினார். வெங்கடேஸ்வரா கல்வி குழுமத்தின் முதன்மை இயக்க அதிகாரி டாக்டர் வித்யா, மருத்துவ கல்லுாரி கண்காணிப்பாளர் டாக்டர் லோகநாதன் முன்னிலை வகித்தனர். கருத்தரங்குஒருங்கிணைப்பாளர் பாலசுப்ரமணியன் வரவேற்றார்.சிறப்பு விருந்தினராக சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனை எலும்பு மருத்துவதுறை இயக்குனர் டாக்டர் சிங்காரவடிவேலு பங்கேற்று எலும்பு முறிவு நவீன சிகிச்சை பற்றி சிறப்புரையாற்றினர். எலும்பியல் துறை பேராசிரியர் சண்முகம், டாக்டர்கள் சின்னதுரை, சாந்தமூர்த்தி, டெர்ரென்ஸ் ஜோஸ் ஜொரோம், உமாசங்கர் மற்றும் ராஜகோபாலன் ஆகியோர் எலும்பியல் அறுவை சிகிச்சைகள் குறித்து பேசினர். டாக்டர்கள் கார்த்திக் ஆனந்த், குலாம் முஹதீன் ஆகியோர் கருத்தரங்கு நோக்கம் குறித்து பேசினர்.கருத்தரங்கில் புதுச்சேரி மற்றும் தமிழகத்தை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட எலும்பியல் சிகிச்சை நிபுணர்கள், பேராசிரியர்கள் கலந்துகொண்டனர். டாக்டர் மணிகண்டன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை