மேலும் செய்திகள்
ஆட்டோ மீது பஸ் மோதல்: டிரைவர் படுகாயம்
22-Apr-2025
பாகூர்: கிருமாம்பாக்கம் அருகே தனியார் பஸ் தடுப்பு கட்டையில் மோதி விபத்துக்குளானதில், 20க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்தனர்.புதுச்சேரியில் இருந்து நாகப்பட்டினம் நோக்கி நேற்று மாலை தனியார் பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த பஸ்சை, தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அடுத்த சூரமங்கலம் பகுதியை சேர்ந்த வெங்கடேசன் 43; என்பவர் ஓட்டிச் சென்றார். புதுச்சேரி - கடலுார் சாலை காட்டுக்குப்பம் அருகே சென்ற போது, மாடு ஒன்று சாலையின் குறுக்கே சென்றுள்ளது. அந்த மாட்டின் மீது மோதாமல் இருக்க டிரைவர் வெங்கடேசன் பிரேக் போட்டு பஸ்சை நிறுத்த முயன்றார்.அதற்குள் கட்டுப்பாட்டை இழந்த பஸ் சாலையின் நடுவே இருந்த தடுப்புக் கட்டையில் மோதி விபத்துக்குள்ளானது. இதில், பஸ்சின் இன்ஜின் உடைந்து ஆயில் சாலையில் கொட்டியது. பஸ்சில் பயணம் செய்த பயணிகளில் 20க்கும் மேற்பட்டோர் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர். தகவலறிந்த கிருமாம்பாக்கம் போக்குவரத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காயமடைந்தவர்களை மீட்டு, அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, போக்குவரத்தை சரி செய்தனர்.இச்சம்பவம் குறித்து கிருமாம்பாக்கம் போக்குவரத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
22-Apr-2025