மேலும் செய்திகள்
இளையான்குடியில் மழையால் நெல் அறுவடை பாதிப்பு
14-Jan-2026
புதுச்சேரி: புதுச்சேரியில் பெய்து வரும் தொடர் மழையால் அறுவடைக்கு தயார் நிலையில் உள்ள நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டு வருகிறது. புதுச்சேரி, மண்ணாடிபட்டு, திருக்கனுார், வம்புபட்டு, விநாயகம் பட்டு, செல்லிபட்டு உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 1000 ஏக்கர் பரப்பளவில் சம்பா சாகுபடியில் பொன்மணி, பொன்னி, பி.பி.டி மற்றும் பாரம்பரிய நெல் ரகங்களான கருப்பு கவனி, மாப்பிள்ளை சம்பா, சீரக சம்பா உள்ளிட்ட நெல் ரகங்களை பயிரிட்டுள்ளனர். இந்த நெற்பயிர்கள் நன்கு வளர்ந்து அறுவடைக்கு தயார் நிலையில் உள்ளன. இந்நிலையில், புதுச்சேரியில் கடந்த இரண்டு நாட்களாக லேசான சாரல் மழை பெய்து வருவதால் அறுவடைக்கு தயார் நிலையில் உள்ள நெற்பயிர்கள் பாதிக்கப்படும் சூழல் நிலவி வருகிறது. எனவே, மழைக்கு பின் அறுவடை செய்யும் நெல்லை அரசே நேரடி கொள்முதல் செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
14-Jan-2026