மேலும் செய்திகள்
பள்ளி ஆண்டு விழாவில் மாணவர்களுக்கு பரிசு
01-Apr-2025
பாகூர்: பாகூர் பேராசிரியர் அன்னுசாமி மேல்நிலைப் பள்ளியில் 43ம் ஆண்டு விழா நடந்தது.விழாவில், பள்ளி முதல்வர் நீலம் அருட்செல்வி வரவேற்றார். பள்ளி தலைவர் டாக்டர் இருதயமேரி தலைமை தாங்கினார். புதுச்சேரி பல்கலைக்கழக தமிழ் துறை தலைவர் பேராசிரியர் சுடலைமுத்து, தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழக தமிழ் வளர்ச்சி துறை தலைவர் குறிஞ்சிநாதன் ஆகியோர் கலந்து கொண்டு கல்வி, விளையாட்டில் சிறப்பிடம் பிடித்து மாணவ- மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி சிறப்புரையாற்றினார். பள்ளி தாளாளர் ராஜராஜன், சேலியமேடு பள்ளி கிளை தாளாளர் கண்ணன் ஆகியோர் வாழ்த்தி பேசினர். நிர்வாக அதிகாரி அருள்ராஜா வள்ளவன் நன்றி கூறினார். விழாவில், மாணவ - மாணவகளின் பல்வேறு கலை நிகழ்சிகள் நடந்தது. இதில், பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் பொது மக்கள் கலந்து கொண்டனர்.
01-Apr-2025