உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ஓட்டுப்பதிவு நாளன்று சம்பளத்துடன் விடுமுறை

ஓட்டுப்பதிவு நாளன்று சம்பளத்துடன் விடுமுறை

 புதுச்சேரி: தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல் நாளன்று, ஊழியர்களுக்கு சம்பளத்துடன் விடுமுறை அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.  இது தொடர்பாக,  மாவட்ட தேர்தல் அதிகாரி குலோத்துங்கன் பிறப்பித்துள்ள உத்தரவு:   மக்கள் பிரதிநிதித்துவச் சட்ட பிரிவின் கீழ் தட்டாஞ்சாவடி தொகுதியை சேர்ந்த வாக்காளர்கள் பணிபுரியும் அரசு, தனியார், வணிக மற்றும் தொழில் நிறுவனங்கள் அனைத்தும், அக். 6 ம் தேதியன்று ஊதியத்துடன் கூடிய விடுமுறை வழங்க வேண்டும்.  விடுமுறை காரணமாக எந்தவொரு தொழிலாளியின் ஊதியத்திலும் பிடித்தமோ அல்லது குறைப்போ செய்யக் கூடாது. தினக்கூலி, தற்காலிக பணியாளர்கள் மற்றும் சுழற்சி முறையில் பணிபுரிபவர்களுக்கும் இது பொருந்தும். தட்டாஞ்சாவடி தொகுதியைச் சேர்ந்த வாக்காளர்கள் வேறு தொகுதிகளிலோ அல்லது பிற பகுதிகளிலோ பணிபுரிந்தாலும், அவர்கள் ஓட்டளிக்க ஏதுவாக விடுமுறை அளிக்கப்பட வேண்டும். இவ்விதிகளை மீறி விடுமுறை வழங்க மறுப்பது அல்லது ஊதியத்தைக் குறைப்பது சட்டத்தின் படி தண்டனைக்குரிய குற்றமாகும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை