உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  ஓவியக் கண்காட்சி துவக்கம்

 ஓவியக் கண்காட்சி துவக்கம்

புதுச்சேரி: புதுச்சேரியில், ஓவியக் கண்காட்சி நேற்று துவங்கியது. புதுச்சேரி, கவர்னர் மாளிகை அருகில் உள்ள வளர் கலைக்கூட அரங்கத்தில், ஓவியக் கண்காட்சி நேற்று துவங்கியது. வரும் 27ம் தேதி வரை நடக்கும், கண்காட்சியை, காலை 10:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை பார்வையிடலாம். கண்காட்சி யை, இந்திரா காந்தி தேசிய கலை மைய முன்னாள் மண்டல இயக்குனர் கோபால் துவக்கி வைத்தார். பாரதியார் பல்கலைக்கூட நுண்கலை துறை தலைவர் பிரபாகரன் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். நிகழ்ச்சியில், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் உறுப்பினர் ராமச்சந்திரன், போட்டோ கிராபர் புதுவை இளவேணி, கும்பகோணம் சிட்டி யூனியன் வங்கி துணை பொது மேலாளர் மார்டின் அமிர்தராஜ், தஞ்சாவூர் தனியார் பள்ளி தாளாளர் சரவணன்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை திருநாவுக்கரசு செய்திருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ