உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / கடற்கரையில் இருந்த பனை மரங்கள் எரிந்து சேதம்

கடற்கரையில் இருந்த பனை மரங்கள் எரிந்து சேதம்

பாகூர்: மணப்பட்டு - மூ.புதுக்குப்பம் கடற்கரையில் இருந்த பனை மரங்கள் மர்மமான முறையில் எரிந்து சேதமடைந்தன.கிருமாம்பாக்கம் அடுத்துள்ள மணப்பட்டு - மூ.புதுக்குப்பம் பல்மைரா கடற்கரை பகுதியில் ஏராளமான பனை மரங்கள் உள்ளன. இந்நிலையில், நேற்று காலை சுமார் 11 மணியளவில், தெற்கு பகுதியில் இருந்த பனை மரங்கள் திடீரென மர்மமான முறையில் தீ பிடித்து எரிந்தது.இதுகுறித்து அப்பகுதி மக்கள் அளித்த தகவலின்பேரில் பாகூர் தீயணைப்பு நிலைய ஏட்டு செல்வம் தலைமையில் தீயணைப்பு படையினர் விரைந்து சென்று, எரிந்து கொண்டிருந்த பனை மரங்கள் மீது தண்ணீரை பீய்ச்சி அடித்து தீ மேலும் பரவாமல் தடுத்து, அணைத்தனர். இருப்பினும் பல மரங்கள் எரிந்து கருகின.தீ விபத்திற்கான காரணம் குறித்து கிருமாம்பாக்கம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ