உள்ளூர் செய்திகள்

இளைஞர் நாள் விழா

புதுச்சேரி : இளைஞர் நாள் விழா கூடப்பாக்கத்தில் நடந்தது. ஊரக வளர்ச்சி வார விழாவை முன்னிட்டு, வில்லியனூர் வட்டார வளர்ச்சி அலுவலகம் சார்பில் நடந்த விழாவில், குலோத்துங்க சோழன் இளைஞர் நற்பணி மன்றத் தலைவர் தாமோதரன் வரவேற்றார். வில்லியனூர் வட்டார வளர்ச்சி அதிகாரி தையல்நாயகி, போட்டிகளைத் துவக்கி வைத்தார். ஆலோசகர் ராமசிவராஜன் வாழ்த்தி பேசினார். விரிவாக்க அதிகாரி இளங்கோ, கிராம சேவிகா பூங்கோதை சிறப்புரையாற்றினர். கிராம நல உதவியாளர் வீரப்பன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மன்றப் பொருளாளர் அய்யனார் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை