உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / துணை ராணுவத்தினர் கொடி அணிவகுப்பு

துணை ராணுவத்தினர் கொடி அணிவகுப்பு

அரியாங்குப்பம் : புதுச்சேரியில் தேர்தல் பணிக்கு வந்துள்ள துணை ராணுவத்தினர் அரியாங்குப்பம், தவளக்குப்பம் பகுதியில் துப்பாக்கி ஏந்தியபடி கொடி அணி வகுப்பு நடத்தினர்.லோக்சபா தேர்தலையொட்டி, புதுச்சேரியில் தேர்தல் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளது. தேர்தல் அமைதியாக நடத்துவதற்கு தேர்தல் துறை அதிகாரிகள் தயார் நிலையில் இருந்து வருகின்றனர். இந்நிலையில், கடலுார் சாலை தவளக்குப்பம் அடுத்த இடையார்பாளையம் பகுதியில் சோதனை சாவடி அமைத்துள்ளனர்.புதுச்சேரியில் தேர்தல் பாதுகாப்புக்கு 2 கம்பெனி துணை ராணுவத்தினர் வரவழைக்கப்பட்டுள்ளனர். நேற்று முன்தினம் இரவு தவளக்குப்பம், அரியாங்குப்பம் ஆகிய இடங்களில் எஸ்.பி., பக்தவச்சலம் தலைமையில், துணை ராணுவத்தினர் கொடி அணிவகுப்பு நடத்தினர்.தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்பே துணை ராணுவத்தினர் அணிவகுப்பு நடத்தியதால், அரசியல் கட்சியினரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ