மேலும் செய்திகள்
பெண் தற்கொலை
9 hour(s) ago
ஹயக்ரீவர் கோவிலில் தேசிகர் உற்சவம்
9 hour(s) ago
குண்டர் தடுப்பு காவல் சட்டத்தை கோட்டை விடும் போலீஸ்
9 hour(s) ago
காரைக்காலில் அக் ஷர் ரோந்து கப்பல் அர்ப்பணிக்கும் விழா
9 hour(s) ago
புதுச்சேரி : புதுச்சேரியில் செயல்படுத்தப்படும் நலத்திட்டங்கள் குறித்து ஆய்வு செய்ய 30 எம்.பி.,கள் கொண்ட பார்லிமெண்ட் குழு வருகை தந்துள்ளது.புதுச்சேரி மாநிலத்தில் காமராஜர் கல்வி நிதியுதவி உள்பட பல்வேறு திட்டங்களை மாநில அரசு செயல்படுத்துகிறது. இதுமட்டுமின்றி, மத்திய அரசின் நிதியுதவியுடன் 120 திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. இந்த திட்டங்களின் செயல்பாடுகளை மறு ஆய்வு செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது.இது தொடர்பாக, பார்லிமெண்ட் எம்.பி.,கள் 30 பேர் அடங்கிய குழுவினர் பிப்ரவரி 21, 22ம் ஆகிய தேதிகளில் புதுச்சேரியில் முகாமிட்டு ஆய்வு செய்வர் என மத்திய அரசு அறிவித்தது. அதன்படி, புதுச்சேரியில் செயல்படுத்தப்படும் நலத்திட்டங்களை ஆய்வு செய்ய, 30 எம்.பி.,க்கள் கொண்ட பார்லிமெண்ட் குழு நேற்று வருகை தந்தது.மகாபலிபுரம் வழியாக புதுச்சேரி வந்த பார்லிமெண்ட் குழுவிற்கு புதுச்சேரி அரசு சார்பில், வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து குழுவினர் ஓட்டல் அக்கார்ட்டில் தங்கினர். இரண்டாம் நாளான இன்று 22ம் தேதி மதியம் 3:00 மணியளவில் இக்குழுவினர் துறை அதிகாரிகளிடம் நேரடியாக கலந்துரையாட உள்ளனர். தலைமை செயலர் சரத் சவுகான், புதுச்சேரி அரசின் மக்கள் தொகை, சிறப்புகள் குறித்து விளக்க உள்ளார். மேலும் புதுச்சேரி அரசின் திட்டங்களின் தற்போதைய நிலை, அதை வேகப்படுத்துவதற்கான வழிமுறைகள் விவாதிக்கப்பட உள்ளது. தொடர்ந்து கவர்னர் தமிழிசை, முதல்வர் ரங்கசாமியை சந்தித்து கலந்துரையாட உள்ளனர். பார்லிமெண்ட் எம்.பி.,கள் குழுவில் இடம் பெற்றுள்ள மத்திய இணை அமைச்சர்கள் தங்களுடைய துறை சார்ந்த பிரச்னைகள் தொடர்பாக பொதுமக்கள், சங்கங்களை சந்தித்து கோரிக்கை மனுக்களையும் பெற முடிவு செய்துள்ளனர்.மேலும் புதுச்சேரியில் அரவிந்தர் ஆசிரமம், ஆரோவில், சிதம்பரம் உள்பட பல்வேறு இடங்களை சுற்றி பார்க்கவும் திட்டமிட்டுள்ளனர்.
9 hour(s) ago
9 hour(s) ago
9 hour(s) ago
9 hour(s) ago