உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பார்லிமெண்ட் எம்.பி.,க்கள் குழு புதுச்சேரிக்கு வருகை: இரண்டு நாட்கள் முகாமிட்டு சர்வே நடத்த முடிவு

பார்லிமெண்ட் எம்.பி.,க்கள் குழு புதுச்சேரிக்கு வருகை: இரண்டு நாட்கள் முகாமிட்டு சர்வே நடத்த முடிவு

புதுச்சேரி புதுச்சேரியில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து30 எம்.பி.,க்கள் கொண்ட பார்லிமெண்ட் குழு வரும் 21ம் தேதிமுதல் இரு நாட்கள் முகாமிட்டு ஆய்வு செய்ய உள்ளது.புதுச்சேரி மாநிலத்தில் காமராஜர் கல்வி நிதியுதவி உள்பட பல்வேறு திட்டங்களை மாநில அரசு செயல்படுத்துகின்றது.இதுமட்டுமின்றி, மத்திய அரசின் நிதியுதவியுடன் 120 திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.இந்த திட்டங்களின் செயல்பாடுகளை மறு ஆய்வு செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது.இது தொடர்பாக, பார்லிமெண்ட் எம்.பி.,க்கள் 30 பேர் அடங்கிய குழுவினர்,கடந்தாண்டு டிசம்பர் 27,28,29 ஆகிய தேதிகளில் புதுச்சேரியில் முகாமிட்டு ஆய்வு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் கடைசிநேரத்தில் அவர்களது வருகை ரத்து செய்யப்பட்டது.இதற்கிடையில் புதுச்சேரியில் செயல்படுத்தப் படும் திட்டங்களை ஆய்வு செய்ய 30 எம்.பி.,க்கள் கொண்ட குழு வரும் 21, 22 ஆகிய தேதிகளில் முகாமிட்டு ஆய்வு செய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து புதுச்சேரியில் உள்ள அரசு துறைகள் அனைத்தும் முழு வீச்சில் அதற்கான ஆயத்த பணிகளை முடுக்கிவிட்டுள்ளன. ஒவ்வொரு துறையில் செயல்படுத்தப்படும் மத்திய அரசு திட்டங்கள் பற்றிய தற்போதைய நிலை குறித்த விபரங்கள் கடந்த ஒருவாரமாக திரட்டப்பட்டு வருகின்றன. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா, சகார்மலா, ஆயுஷ்மான் பாரத், ஜல்ஜீவன் திட்டம் உள்ளிட்ட முக்கிய திட்டங்கள் உள்ளன. இந்த திட்டங்களின் இறுதி செயல்பாடுகள் மதிப்பீடு செய்யப்பட்டு வருகின்றன.மத்திய அரசு திட்டங்களை காட்டிலும் புதுச்சேரி அரசு சார்பில் செயல்படுத்தப்படும் முக்கிய திட்டங்கள் குறித்தும் அறிந்து கொள்ள உள்ளனர்.குறிப்பாக புதுச்சேரியில் சமூக பொருளாதார வளர்ச்சி, நலத்திட்டங்களுக்கு செயல்படுத்தப்படும் தொகை,தனி நபர் வருமானம், நகரம், கிராமம் மக்கள் தொகை, மாநில வருவாய் குறித்து நேரில் கேட்டு அறிந்து கொள்ள திட்டமிட்டுள் ளனர்.21ம் தேதி புதுச்சேரி வரும் 30 எம்.பி.,க்கள் குழுவினர், ஆரோவில், அன்னை மற்றும் அரவிந்தர் ஆசிரமத்தை சுற்றி பார்க்கின்றனர். 22ம் தேதி மதியம் 12 மணியளவில் துறை அதிகாரிகளிடம் நேரடியாக கலந்துரையாடி புதுச்சேரி அரசின் திட்டங்களின் தற்போதை நிலை,அதை வேகப்படுத்துவதற்கான வழிமுறைகள் குறித்து விவாதிக்கப்பட உள்ளன.தொடர்ந்து கவர்னர், முதல்வரை சந்தித்து மத்திய அரசின் திட்டங்களை வேகப்படுத்த கலந்துரையாடவும் முடிவு செய்துள்ளனர்.மத்திய அரசு திட்டங்களுக்கு கூடுதல் நிதியை ஒதுக்க வேண்டும் என புதுச்சேரி அரசு பார்லிமெண்ட் எம்.பி.,க்களிடம் கோரிக்கை வைக்க முடிவு செய்துள்ளன.புதுச்சேரியில் முகாமிட்டு பார்லிமெண்ட் எம்.பி.,கள் ஆய்வு செய்ய உள்ள சூழ்நிலையில் அவர்கள் தங்க உள்ள ஓட்டல்கள், பார்வையிட உள்ள இடங்கள் குறித்து ஆய்வு செய்து, அந்த இடங்களில் போலீஸ் பாதுகாப்பினை பலப்படுத்தவும் அரசு தீவிர ஆலோசனை நடந்து வருகின்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி