உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பதவி உயர்வுக்கு போலி சான்றிதழ்: பாசிக் ஊழியருக்கு 6 நாள் சிறை

பதவி உயர்வுக்கு போலி சான்றிதழ்: பாசிக் ஊழியருக்கு 6 நாள் சிறை

புதுச்சேரி: பதவி உயர்வுக்கு போலி சான்றிதழ் சமர்ப்பித்த பாசிக் ஊழியருக்கு 6 நாள் சிறை தண்டனை விதித்து புதுச்சேரி கோர்ட் தீர்ப்பு வழங்கியுள்ளது. விழுப்புரம் மாவட்டம், பள்ளிச்சேரியை சேர்ந்தவர் குமாரவேல், 56. இவர், கடந்த 1995ம் ஆண்டு பாசிக் நிறுவனத்தில் பணியில் சேர்ந்தார். பின், விவசாய தொழில் நுட்ப தகுதி சான்றிதழ் சமர்ப்பித்ததை தொடர்ந்து கடந்த 1998ம் ஆண்டு மே 5ம் தேதி விற்பனையாளராக பதவி உயர்வு வழங்கப்பட்டது. இந்நிலையில், அவர் வழங்கிய சான்றிதழ் மீது சந்தேகம் ஏற்படவே, ஆய்வு செய்ததில் போலி என தெரிய வந்தது. இதுகுறித்து பாப்ஸ்கோ நிறுவனத்தின் முதன்மை இயக்குநர் நடராஜன் அளித்த புகாரின் பேரில் டி.நகர் போலசார் வழக்குப் பதிந்து குமாரவேலை கைது செய்தனர். இந்த வழக்கு புதுச்சேரி மாஜிஸ்திரேட் கோர்ட் 1ல் நடந்தது. வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட் சேரலாதன், பதவி உயர்விற்காக போலி சான்றிதழ் சமர்ப்பித்த குமாரவேலுக்கு 6 நாள் சிறை தண்டனை மற்றும் ரூ.3,000 அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ