உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பவழங்குடி சித்தர் குருபூஜை விழா

பவழங்குடி சித்தர் குருபூஜை விழா

திருக்கனுார், : சோம்பட்டு பவழங்குடி சித்தர் ஜீவசமாதியில் குருபூஜை விழா நடந்தது. சோம்பட்டில் பவழங்குடி சித்தர் ஜீவசமாதி உள்ளது. இங்கு சித்தரின் 217 வது ஆண்டு குரு பூஜை விழா நடந்தது.இதையொட்டி, காலை 8:00 மணி முதல் கால யாக வேள்வியுடன் கூடிய சிறப்பு அபிஷேக ஆராதனைகள், மகா தீபாராதனை நடந்தது. மதியம் 12:00 மணிக்கு சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. இதில், அமைச்சர் நமச்சிவாயம் உள்ளிட்ட திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். பின்னர், அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கிராம பொது மக்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்