அழகிய சுற்றுலா நகரம் புதுச்சேரி. மினி கோவா என அழைக்கப்படும் புதுச்சேரிக்கு ஒவ்வொரு ஆண்டும் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து வருகிறது. புதுச்சேரியில் கனகசெட்டிக்குளம் துவங்கி புதுக்குப்பம் முள்ளோடை வரை உள்ள 31 கி.மீ., கடற்கரை உள்ளது. இதில், பழைய சாராய ஆலையில் இருந்து சீகல்ஸ் ஓட்டல் வரை உள்ள ப்ரோமனட் கடற்கரை (ராக் பீச்), பாண்டி மெரினா, சின்ன வீராம்பட்டினம் ஈடன் கடற்கரை, நோணாங்குப்பம் பேரடைஸ் கடற்கரை மிகவும் பிரசித்தி பெற்றது.சுனாமிக்கு பிறகு ப்ரோமனட் கடற்கரையில் கருங்கள் பாறை கொட்டப்பட்டதால், கடல் மணலில் இறங்கி விளையாட முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் புதிய தொழில்நுட்பத்தில் ரூ. 25 கோடி செலவில் இரும்பினால் செய்யப்பட்ட கூம்பு வடிவ அமைப்பு தலைமை செயலகம் எதிரில் கடலில் அமைத்து, செயற்கை மணல் பரப்பு உருவாக்கப்பட்டது. இதன் மூலம்கடல் மணலில் இறங்கி சுற்றுலா பயணிகள், உள்ளூர் மக்கள் விளையாடி மகிழ்கின்றனர்.கடல் நீரோட்டம், அலையின் சீற்றம் காரணமாக, அழகிய கடற்கரை சில நேரம் ஆபத்தான கடற்கரையாக மாறிவிடுகிறது. இதனால் வெளியூர்களில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் கடலில் இறங்கி குளிக்கும்போது,அலையில் சிக்கி உயிரிழக்கும் சம்பவம் அதிகரித்து வருகிறது.கடந்த 5 ஆண்டுகளில் பெரியக்கடை போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் மட்டும் 22 பேர் கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். ஒதியஞ்சாலை போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட சீகல்ஸ், பாண்டி மெரினா பகுதியில் 27 பேர் உயிரிழந்துள்ளனர். வீராம்பட்டினம், சின்னவீராம்பட்டினம் கடற்கரையில் 8 பேரும்,தவளக்குப்பம் பகுதிக்கு உட்பட்ட பேரடைஸ் கடற்கரை பகுதியில்10 பேர் உயிரிழந்துள்ளனர்.குறிப்பிட்ட 4 கடற்கரையில் மட்டும் கடந்த 5 ஆண்டுகளில் 67 சுற்றுலா பயணிகள் உயிரிழந்துள்ளனர்.கடந்த புத்தாண்டு அன்று 4 மாணவர்களும், அடுத்த சில நாட்களில் வால்பாறையைச் சேர்ந்த 2 வாலிபர்களும், நேற்று முன்தினம் ஒரு பிளஸ் 1 மாணவரும் கடலில் மூழ்கி உயிரிழந்தனர்.கடலில் மூழ்கி உயிரிழப்பு ஏற்படுவதை அறிந்து முதல்வர் ரங்கசாமி நேற்று முன்தினம் தனது ஆதங்கத்தை தெரிவித்தார். கடலில் சுற்றுலா பயணிகள் இறங்காதபடியும், ஆபத்தான கடற்கரை என சுற்றுலா பயணிகளிடம்அறிவுறுத்த வேண்டுகோள் விடுத்தார்.புதுச்சேரி கடற்கரையில் குளிக்க ஏற்கனவே தடை உள்ளது. ஆனால், தடையை மீறி குளிக்கும் சுற்றுலா பயணிகளே உயிரை இழக்கின்றனர். வெறும் உத்தரவு மட்டும் இருந்தால், உயிரிழப்பை தடுக்க முடியாது என்பதால், மாவட்ட நிர்வாகத்தின் மூலம் நிரந்த தடை உத்தரவும், மீறி கடலில் இறங்கி குளித்தால் அபராதம், தண்டனை விதிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இதற்கான பரிந்துரை சுற்றுலா துறை மூலம் வருவாய்த்துறைக்கு அனுப்பட்டுள்ளது. இதை ஏற்றுபுதுச்சேரி கடலில்இறங்கி குளிப்பதிற்கு நிரந்தர தடை விதிக்கவும், மீறினால் தண்டனை, அபராதம் விதிக்கும் வகையில் புதிய சட்டம் கொண்டுவர அரசு முடிவு செய்துள்ளது.பாக்ஸ்:கம்பி வேலி பரிசீலிக்கலாம்கடற்கரையோரம் உள்ள ஆன்மிக தளங்களில், புனித நீராடும் பக்தர்கள் பாதுகாப்பிற்காக கடலில் சில அடி துாரம் வரை குளிக்கும் வகையில், கம்பி வேலி அமைக்கப்பட்டுள்ளது. இதுபோல், தலைமை செயலகம், சீகல்ஸ், பாண்டி மெரினா கடற்கரையில் சுற்றுலா பயணிகள் சில அடி துாரம் வரை கடலில் இறங்கி கால் நனைக்கும் வகையில் பாதுகாப்பு வேலி அமைக்கும் திட்டத்தை பரிசீலனை செய்யலாம்.