உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / முக்கிய சாலையில் பல மணி நேரம் மறியல் போலீசார் மெத்தனத்தால் மக்கள் அதிருப்தி

முக்கிய சாலையில் பல மணி நேரம் மறியல் போலீசார் மெத்தனத்தால் மக்கள் அதிருப்தி

ஒழுக்கத்தை கற்று தரும் பள்ளி ஆசிரியரே, 6 வயது பிஞ்சு பள்ளி சிறுமியை பாலியல் ரீதியாக துன்புறுத்திய சம்பவம், புதுச்சேரியில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது.பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர், பொதுமக்களுடன் பள்ளிக்கு சென்று, முறையிட்டனர். குற்றம் சாட்டப்பட்ட ஆசிரியரை, போலீசார் பள்ளியில் கைது செய்து, வாகனத்தில் ஏற்றிய போது, ஆத்திரமடைந்த நுாற்றுக்கும் மேற்பட்டவர்கள், ஆசிரியரை சராமாரியாக தாக்கினர். சம்பவம் நடந்த இடத்தில் கூட்டம் சேர்ந்ததை அறிய கூட முடியாத போலீசார், அலட்சியமாக, ஆசிரியரை அழைத்து செல்ல முயன்றது பெரும் பாடாகி விட்டது.போலீசாரின் அலட்சியத்தால், ஆசிரியர் அந்த இடத்திலேயே, பலியாகும் வாய்ப்பு ஏற்பட்டிருக்கும். பொதுமக்களின் கோபம் ஆசிரியரின் ஒரு வழி பன்னியது. குற்றம் சாட்ட ஆசிரியரை கைது செய்த பின்னரும் பொதுமக்கள் பள்ளி வளாகத்தில் புகுந்து சூறையாடி, பள்ளி வாகனம் மற்றும் பொருட்களை சேதப்படுத்தியுள்ளனர். போதிய போலீசார் உடனடியாக வந்து பாதுகாப்பு அளிக்காமல் இருந்தது போலீசாரின் மெத்தனத்தை காட்டியது.தமிழகத்தில், பல்வேறு பிரச்னைக்கு சாலை மறியல் நடக்கும். ஆனால், அதிக பட்சம் அரை மணி நேரத்தில் இருந்து ஒரு மணி நேரத்திற்குள் நடவடிக்கை எடுத்து, போக்குவரத்து சீர் செய்யப்படும். இல்லை என்றால், தமிழக போலீசார் தங்களின் பார்முலா மூலம், தீர்வு காண்பர். பள்ளி சிறுமியை பாலியல் ரீதியாக துன்புறுத்திய, ஆசிரியரை கைது செய்யப்பட்டார். பள்ளியை சூறையாடி பொருட்கள் சேதம் செய்யப்பட்டது. ஆனால், மாலையில் இருந்து நள்ளிரவு 2:00 மணி வரை, இ.சி.ஆர். சாலையில், மறியல் செய்ததை 500க்கும் மேற்பட்ட போலீசாருடன் போலீஸ் உயரதிகாரிகள் நின்று வேடிக்கை பார்த்தது, வாகனத்தில் பல மணி நேரம் காத்திருந்த பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது. சாலை மறியலை, உடனடியாக சீர் செய்யும் தமிழக போலீசாரை பார்த்து, புதுச்சேரி போலீசார் பாடம் கற்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !