உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பெருமாள் கோவில் தேர் வெள்ளோட்டம்

பெருமாள் கோவில் தேர் வெள்ளோட்டம்

வில்லியனுார்: வில்லியனுார் தென்கலை வரதராஜ பெருமாள் கோவில் புதிய தேர் வெள்ேளாட்டத்தை முதல்வர் துவக்கி வைத்தார்.வில்லியனுார் பெருந்தேவி தாயார் சமேத தென்கலை வரதராஜ பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ரங்கராஜன் சாரிட்டபிள் டிரஸ்ட் சார்பில், தங்க தேர் செய்து வருகின்றனர். முதற்கட்டமாக அதற்கான மரத்தேர் வெள்ளோட்டம் நேற்று நடந்தது. திருக்கோவிலுார் 26வது பட்டம் ராமானுஜாச்சார்யார் ஜீயர் சுவாமிகள் மங்களா சாஸனம் செய்து வைத்தார். நிகழ்ச்சியை முதல்வர் ரங்கசாமி தேரை இழுத்து துவக்கி வைத்தார். சபாநாயகர் செல்வம், அமைச்சர்கள் லட்சுமிநாராயணன், தேனீ ஜெயக்குமார், எதிர்க்கட்சித் தலைவர் சிவா, கோவில் நிர்வாக அதிகாரி டாக்டர் சந்தான கிருஷ்ணன் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !