உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மருத்துவ படிப்பிற்கு போலி ஆவணம் நடவடிக்கை கோரி கவர்னர், முதல்வரிடம் மனு

மருத்துவ படிப்பிற்கு போலி ஆவணம் நடவடிக்கை கோரி கவர்னர், முதல்வரிடம் மனு

புதுச்சேரி : புதுச்சேரியில் என்.ஆர்.ஐ., மருத்துவ படிப் பிற்கு போலி ஆவணங்களை சென்டாக்கில், சமர்ப்பித்தவர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என, மாணவர் மற்றும் பெற்றோர் நலச்சங்க தலைவர் பாலசுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் கவர்னர் மற்றும் முதல்வரிடம் மனு அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:புதுச்சேரி மாநிலத்தில் இயங்கும், மருத்துவக்கல்லுாரிகளில், 116 என்.ஆர்.ஐ., எம்.பி.பி.எஸ் சீட்டுகள், வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்காக 'சென்டாக்' மூலம் நிரப்பப்பட்டு வருகிறது.இந்த படிப்பிற்கு இதுவரை விண்ணப்பித்த, 386 மாணவர்களில், 50,க்கும் மேற்பட்டோர் போலி ஆவணங்கள் அடிப்படையில், வெளிநாட்டு துாதரக சான்றிதழை, சென்டாக்கில் சமர்ப்பித்துள்ளனர்.இந்த சான்றிதழை அளித்த மாணவர்கள், பெற்றோர்கள், உதவி செய்த அதிகாரிகள் மீது, கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த வழக்கை மத்திய உள்துறையிடம் அளித்து, குற்றச்சாட்டுக்கு உண்டான நபர்கள் மீது, சி.பி.ஐ., விசாரணை நடத்த வேண்டும்.சென்டாக்கில், போலி வெளிநாட்டு ஆவணங்கள் மூலம் கடந்த காலங்களில், புதுச்சேரி அரசு மற்றும் தனியார் கல்லுாரிகளில் விண்ணப்பித்த மாணவர்கள் மீதும், அதற்கு உதவி செய்த முன்னாள் அதிகாரிகள் மீதும், விசாரணை நடத்தி உரிய தண்டனை பெற்றுத்தர வேண்டும்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை