உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மின் கட்டண உயர்வை குறைக்க கோரி மனு

மின் கட்டண உயர்வை குறைக்க கோரி மனு

புதுச்சேரி : புதுச்சேரியில் மின்சார கட்டண உயர்வை குறைக்க கோரி அமைச்சர் நமச்சிவாயம், மத்திய அமைச்சர் மனோகர் லாலை சந்தித்து மனு அளித்தார். புதுடில்லியில் மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கான மின்துறை அமைச்சர்கள் மாநாடு நடந்தது.மாநாட்டில் பங்கேற்ற புதுச்சேரி மின்துறை அமைச்சர் நமச்சிவாயம், புதுச்சேரியில் மின் துறையின் வளர்ச்சி மற்றும் மேற்கொள்ள வேண்டிய திட்டங்கள் குறித்து பேசினார்.தொடர்ந்து, புதுச்சேரியில் மின்சாரம் கொள்முதல் ஒப்பந்தம் செய்வதற்கான ஒதுக்கீட்டை குறைந்த கட்டண நிறுவனத்திடம் அளித்து மின்சார கட்டண உயர்வை குறைக்க கோரி மத்திய மின்துறை அமைச்சர் மனோகர் லாலை சந்தித்து மனு அளித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ