உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / 20 தொகுதியில் காங்., போட்டி இல்லையெனில் தனித்து களம் மேலிட பொறுப்பாளரிடம் மனு

20 தொகுதியில் காங்., போட்டி இல்லையெனில் தனித்து களம் மேலிட பொறுப்பாளரிடம் மனு

புதுச்சேரி, : வரும் சட்டசபை தேர்தலில் 30 தொகுதிகளிலும் காங்., வேட்பாளர்களை நிறுத்த வேண்டும் என கட்சியின் மேலிட பொறுப்பாளிடம், மாநில நிர்வாகிகள் மனு அளித்தனர். அடுத்தாண்டு நடைபெறவுள்ள சட்டசபை தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் மாநில நிர்வாகிகளிடம், காங்., கட்சியின் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர், நேற்று முன்தினம் கருத்துகளை கேட்டறிந்தார். மேலிட பொறுப்பாளரை, மாநில பொதுச்செயலாளர்கள் மணவாளன், சிவசண்முகம், வேல்முருகன், ஓ.பி.சி., தலைவர் கண்ணன், மாவட்ட தலைவர் ரமேஷ், செயலாளர்கள் சிவ சரவணன், சிவா, செல்வம், விவசாயப்பிரிவு செல்வகணபதி, சரவணன், செல்வனாதன், துரை, வழக்கறிஞர் பிரிவு தலைவர் மருதுபாண்டி, மீனவர் பிரிவு புகழேந்தி,ரவிச்சந்திரன், வட்டாரத் தலைவர் பாபு, சிறப்பு அழைப்பாளர்கள் உதயக்குமார், சாம்பசிவம் ஆகியோர் முன்னாள் முதல்வர் நாராயணசாமி தலைமையில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். அதில், வரும் சட்டசபை தேர்தலில் காங்., கட்சி 30 தொகுதியிலும் வேட்பாளர்களை நிறுத்தவேண்டும். கூட்டணி பேச்சுவார்த்தையை காங்., அலுவலகத்தில் நடத்த வேண்டும். கூட்டணியில் காங்., கட்சி 20 தொகுதியில் போட்டியிட வேண்டும். இல்லையெனில் தனித்து போட்டியிட வேண்டும் என, குறிப்பிடப்பட்டிருந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ