உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  காலாப்பட்டில் பெட்ரோல் பங்க் திறப்பு

 காலாப்பட்டில் பெட்ரோல் பங்க் திறப்பு

புதுச்சேரி: புதுச்சேரி, காலாப்பட்டு இ.சி.ஆரில் வேணு கார்ப்பரேஷனின் பாரத் பெட்ரோலியம் எத்தனால் கலக்காத 'ஸ்பீடு 100' பெட்ரோல் பங்க் திறப்பு விழா நேற்று நடந்தது. விழாவில் பாரத் பெட்ரோலியம் தென்னிந்திய தலைமை அதிகாரி செலுகர், தமிழ்நாடு- புதுச்சேரி தலைமை அதிகாரி வத்சவ விகாஸ் குமார் ஆகியோர் பங்கேற்று பெட்ரோல் பங்கை திறந்து வைத்தனர். இதில், நேரு எம்.எல்.ஏ., திருச்சி மண்டல அதிகாரி அருண் சுப்ரமணியன், புதுச்சேரி விற்பனை அதிகாரிகள் ராகவர்த்தினி, சந்தோஷ்குமார் மற்றும் தொழிலதிபர்கள், நண்பர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். விழாவில், வேணு கார்ப்பரேஷன் உரிமையாளர்கள் பொற்பாவை மற்றும் நவீன் கார்த்திகேயன் ஆகியோர் வரவேற்று, நன்றி கூறினர். திறக்கப்பட்ட பெட்ரோல் பங்கில் எத்தனால் கலக்காத 'ஸ்பீடு 100' பெட்ரோல் மற்றும் சி.என்.ஜி., காஸ் ஆகியவை புதிதாக அமைக்கப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !